சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி - 5 பேர் காயம்

சீனாவின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-11-25 18:07 GMT
பெய்ஜிங்,

தென்சீனாவில் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் 5.2 என்ற புள்ளிக் கணக்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க மையம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், 22.89 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 106.65 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையை மையமாக கொண்டு ஏற்பட்டதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தகவல் தெரிவித்தது.

இந்நிலநடுக்கத்துக்கு டாக்சின் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக மீட்பு படையினரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  மாவட்ட அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். ஜுவாங் பகுதி மட்டுமின்றி டாக்ஸினிலும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்நிலநடுக்கத்தால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் விழுந்த பாறைகளும் காணப்படுவதாகவும் ஜிங்சி நகரின் அவசர சிகிச்சை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்