கென்யாவில் பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு; 3 பயணிகள் பலி

கென்யாவில் பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பயணிகள் பலியாகினர்.

Update: 2020-01-03 22:30 GMT
நைரோபி, 

சோமாலியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் அல் சபாப் பயங்கரவாதிகள் அண்டை நாடான கென்யாவிலும் தற்போது காலூன்றி பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான மொம்பாசா நகரில் இருந்து லாமு நகருக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர்.

அங்கு ஒரு சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். துப்பாக்கிச்சூட்டில் 5 பயணி களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.

அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மற்ற 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அல் சபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்