ஸ்பெயின் நாட்டில் கடுமையான பனிப்பொழிவு, மோசமான வானிலை காரணமாக 4 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-01-21 22:19 GMT

* சீனாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஹூவாயின் மூத்த நிர்வாகி மெங் வான்ஜவ், கனடாவில் 2018-ல் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, நாடு கடத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை வான்கூவர் கோர்ட்டில் நேற்று தொடங்கியது.

* டெஹ்ரானில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, 176 பேர் பலியானது உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. முதலில் இது விபத்து என கருதப்பட்டது. பின்னர், ஈரான் ராணுவம் தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் தற்போது விமானத்தின் மீது 2 ஏவுகணைகள் வீசப்பட்டதை ஈரான் பயணிகள் விமான ஆணையம் உறுதி செய்துள்ளது.

* ஏமனில் நிஹிம் மாவட்டத்தில் அரசு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலர் பலியாகினர். எத்தனை பேர் பலியாகினர் என்பது உறுதிபட தெரியவில்லை.

* ஸ்பெயின் நாட்டில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. மோசமான வானிலை காரணமாக அங்கு 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை அதன் நிறுவன உறுப்பினரான அமீர் முகமது அப்துல் ரகுமான் மாவ்லி அல் சல்பி தலைமை தாங்கி நடத்தி வருவதாக ரஷிய தகவல் ஒன்று கூறுகிறது.

மேலும் செய்திகள்