இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் : டிரம்ப் டுவிட்

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-15 06:09 GMT
டொனால்டு டிரம்ப் (PTI )
வாஷிங்டன்,

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மனைவி மெலனியாவுடன் வருகிற 24-ந் தேதியும், 25-ந் தேதியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில்,  இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டொனால்  டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “பேஸ்புக்கில் நான் முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியப் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் அறிவித்துள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 

நான் இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவுக்குச் செல்ல இருக்கிறேன். நான் இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். இப்பயணத்தில் இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறவுள்ளன” எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்