மார்ச் 31-ல் அரண்மனையில் இருந்து முழுமையாக வெளியேறும் ஹாரி-மேகன் !

அரச குடும்பத்தில் இருந்து மார்ச் 31-ல் ஹரி-மேகன் தம்பதி அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறார்கள்

Update: 2020-02-20 05:17 GMT
லண்டன்,

இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். இங்கிலாந்து அரசு மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரம் மீது ஹாரி, மேகன் ஆகிய இருவரும் பற்றில்லாமல் இருந்து வந்த நிலையில் அந்த தம்பதி இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில்,  அரச குடும்பத்தின் மூத்த குடும்ப உறுப்பினர் பதவியில் இருந்து மார்ச் 31 தேதி சட்டப்படி முழுமையாக ஹாரி-மேகன் தம்பதி விலகவுள்ளனர்.  இதனையடுத்து ஹரி-மேகன் தம்பதி ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை விவகாரங்களில் இருந்து முழுமையாக வெளியேறிவிடுவர் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2 பேரும் வரும் வாரத்தில் அரண்மனை தொடர்பான நிகழ்ச்சியில், இறுதியாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்