சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் 556 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-23 06:03 GMT
சியோல்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.  கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345ல் இருந்து 2,442 ஆக அதிகரித்து உள்ளது.  இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 288ல் இருந்து 77 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.

சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவில் அதிவேகமுடன் பரவ தொடங்கியுள்ளது.  123 பேருக்கு பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டு உள்ளது.  இதனால் தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்