ஜப்பானில் சரக்கு கப்பல், படகுடன் மோதியது - 13 சிப்பந்திகள் மாயம்

ஜப்பானில் சரக்கு கப்பல், படகுடன் மோதிய விபத்தில் சிக்கி 13 சிப்பந்திகள் மாயமாகினர்.

Update: 2020-03-01 23:02 GMT
டோக்கியோ,

ஜப்பான் நாட்டு கடலில் (ஆவோமோரி மாகாணத்தில்), ரொக்காசோ நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில், பெலிஸ் நாட்டின் கொடியுடன் வந்த குவா ஜிங் என்ற சரக்கு கப்பல், மீன்பிடி படகு ஒன்றுடன் நேற்று முன்தினம் இரவு மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தின்போது, சரக்கு கப்பல் சிப்பந்திகள் 14 பேரில் 13 பேர் காணாமல் போய்விட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு சிப்பந்தி மீட்கப்பட்டு விட்டார்.

மாயமான சிப்பந்திகளில் 5 பேர் வியட்நாமையும், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டையும் சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

காணாமல் போன சிப்பந்திகளை தேடும் வேட்டையில் ஜப்பான் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணியில் 6 விமானங்கள், 6 ரோந்து கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் மீன்பிடி படகில் வந்த 15 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும் செய்திகள்