கொரோனா வைரஸ் அச்சம்: எல்லைகளை மூடியது நேபாளம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, நேபாளம் தனது எல்லைகளை மூடியுள்ளது.

Update: 2020-03-23 22:24 GMT
காத்மாண்டு,

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் தனது எல்லைகளை மூடியுள்ளது.

சீனா மற்றும் இந்தியாவில் இருந்து நிலம் வழியாக தங்கள் நாட்டுக்குள் நுழையும் 37 வழிப்பாதைகளையும் 29-ந்தேதி நள்ளிரவு வரை மூடுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இந்த நடவடிக்கை மக்கள் நுழைவதற்கு மட்டுமே தடையை ஏற்படுத்தும் என்றும், பொருட்கள் வழக்கம்போல பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்