இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

Update: 2020-03-24 23:46 GMT
ரோம்,

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சீனாவை காட்டிலும் இரு மடங்கு இழப்பை சந்தித்துள்ளது, இத்தாலி. அங்கு தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இத்தாலிக்கு உதவுவதற்கு உலக நாடுகள் முன்வந்துள்ளன. சீனா 22 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு மற்றும் 30 டன் மருத்துவ பொருட்களை முதல் கட்டமாக இத்தாலிக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த நிபுணர் குழுவினர் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்த தொழில் நுட்பங்களை இத்தாலிய டாக்டர்களுக்கு விளக்கி கூறுவார்கள். இதற்கிடையில், கியூபாவில் எபோலா தொற்றின்போது சிகிச்சை அளித்த நிபுணத்துவம் வாய்ந்த 52 டாக்டர்களை கியூபா அரசு இத்தாலிக்கு அனுப்பி உள்ளது.

ரஷியா தனது பங்காக 100 டாக்டர்கள் அடங்கிய குழுவையும், கிருமிநாசினி தெளிக்கும் அதிநவீன எந்திரங்களையும் இத்தாலிக்கு அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்