கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி உயிரிழந்தது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-03-29 07:44 GMT

சீனாவின்  உகான் நகரில் வெளிப்பட்ட   கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.  கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்காததால், கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசால் உலகம் முழுவதிலும் 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளும் கொரோனாவின் தாக்கத்திற்கு தப்பவில்லை. ஸ்பெயினில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கிட்டதட்ட 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார்.

 வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தார். அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானது ஸ்பெயின் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்