கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை

ஜெர்மனியில், மாகாண நிதியமைச்சர் ஒருவர் கொரோனாவினால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-03-30 03:18 GMT
பெர்லின்

ஜெர்மனியில் கொரோனா பரவல் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில், மாகாண நிதியமைச்சர் ஒருவர் கொரோனாவினால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாணத்தின் நிதியமைச்சராக கடந்த 10 ஆண்டுகாலமாக இருந்து வரும் தாமஸ் ஸ்கேஃபர் (வயது 54). இவரது  உடல் பிராங்பேர்ட்டுக்கு அருகிலுள்ள ஹோச்ஹெய்ம் பகுதி ரயில் தண்டவாளத்தில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

தாமஸ் ஸ்கேஃபர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அம்மாகாண தலைவர் வோல்கர் பூஃபியர் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை எவ்வாறு சரிசெய்யப் போகிறோம் என மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக ஸ்கேஃபர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.


வோல்கர் பூஃபியர்  வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்
 
ஸ்கேஃபர் இழப்பு கடும் அதிர்ச்சியையும், மீளாத் துயரையும் தங்களுக்கு தந்திருப்பதாகவும், கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இரவு, பகல் பாராமல் நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை கொடுத்து, தேவையான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தார். 

 நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் அவரின் உதவி எங்களுக்கு மிகவும் தேவையாக இருந்த நிலையில் திடீரென அவரின் மரணம் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் இருப்பதாக உணர்ச்சிவசப்பட்ட முறையில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்