அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ் பலி எணணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. ஒரேநாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-03-31 04:33 GMT
வாஷிங்டன்

சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள சமார் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் தற்போது வரையில் 7,82,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரும் கொரோனா தொற்றினால் அங்கு உயிரிழந்துள்ளனர்.

 உலக அளவில் அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,000ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆக 3003 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்