உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.98 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.98 லட்சமாக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-04 02:39 GMT
ஜெனீவா, 

கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஒரு சேர உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் பரவல் வேகம் அதிகரித்து வருகிறது.  வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது புதிதாக தொற்று ஏற்படுவது கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை உலக அளவில் 10.98 லட்சமாக உள்ளது. அமெரிக்கா - 2.77 லட்சம், இத்தாலி - 1.19 லட்சம், ஸ்பெயின் - 1.19 லட்சம், ஜெர்மனி - 91,159, பிரான்ஸ் - 64,338 ,ஈரான் - 53,183, பிரிட்டன் - 38,168, பேருக்கு   கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 59,160 பேர் பலியாகியுள்ளனர். 228,923 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்