இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்தது

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.

Update: 2020-04-27 01:59 GMT
ரோம்,

இத்தாலியில், கடந்த மாதம் 18ந்தேதியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி இருந்தது.

இந்நிலையில், 6 வாரங்களுக்கு பிறகு, பலி எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த 24ந்தேதி 420 பேர் பலியான நிலையில், 25ந்தேதி 415 பேர் பலியானார்கள். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் செய்திகள்