ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2020-05-06 17:40 GMT
தெஹ்ரான்,

உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,78,012 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,61,243 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து 12,75,321 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,650 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 78 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்னிக்கை 6,418 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 81,587 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்