உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39,81,763 ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 39,81,763 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-08 18:33 GMT
வாஷிங்டன், 

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக தென்பட்ட கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகின் 200 நாடுகளுக்கு பரவி விட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்திடம் பதிவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றானது, இப்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள், மற்றும் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது  39,81,763 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 13,72,687 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,74,434  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 13 லட்சம் பேரும், ஸ்பெயினில் 2.60 லட்சம் பேரும், இத்தாலியில் 2.17 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 2.11 லட்சம் பேரும்,  ரஷ்யாவில் 1.88 லட்சம் பேரும், பிரான்சில் 1.75 லட்சம் பேரும், ஜெர்மனியில் 1.70 லட்சம் பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும் செய்திகள்