வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் - ஆளுநர்களுக்கு டிரம்ப் கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் ஆளுநர்களுக்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2020-05-23 05:49 GMT
வாஷிங்டன்

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு  நடவடிக்கைகளை தளர்த்துவதை நோக்கி நாடு படிப்படியாக நகர்வதால், அமெரிக்க மாநில ஆளுநர்கள் வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறி உள்ளார்.

வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- 

தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு இல்லங்களை இன்றியமையாத சேவைகளை வழங்கும் அத்தியாவசிய இடங்களாக நான் அடையாளம் காண்கிறேன்

ஆளுநர்கள் சரியானதைச் செய்ய வேண்டும், இந்த மிக முக்கியமான அத்தியாவசிய நம்பிக்கை இடங்களை இப்போதே திறக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், நான் ஆளுநர்களை மீறி உத்தரவிடுவேன். அமெரிக்காவில், நமக்கு அதிக பிரார்த்தனை தேவை என கூறினார்

மேலும் செய்திகள்