கொரோனா குறைந்து வரும் நாடுகளில் உடனடியாக இரண்டாவது அலை- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா குறைந்து வரும் நாடுகளில் உடனடியாக இரண்டாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2020-05-26 10:52 GMT
ஜெனீவா

கொரோனா வைரஸ் குறைவதாகத் தோன்றும் நாடுகள் நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மிக விரைவில் தளரத்திவிட்டால், ‘உடனடி இரண்டாவது அலையை’ எதிர்கொள்ளக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

பல நாடுகளில் கொரோனா பாதிப்புகள் குறைந்து கொண்டே இருக்கும்போது, ​​அவை மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இன்னும் அதிகரித்து வருகின்றன என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் டாக்டர் மைக் ரியான் கூறினார்.

முதல் அலையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் நீக்கப்பட்டால், தொற்று விகிதங்கள் மீண்டும் விரைவாக உயர வாய்ப்புள்ளது என்று ரியான் கூறினார்.

நோய் எந்த நேரத்திலும் உயரக்கூடும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.நோய் இப்போது குறைந்து கொண்டே இருப்பதால், அது தொடர்ந்து குறைந்து கொண்டே போகும், இரண்டாவது அலைக்குத் தயாராக பல மாதங்கள் கிடைத்துள்ளன என்று நாம் ஊகிக்க முடியாது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள நாடுகள் பொது சுகாதாரம், சமூக நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் மற்றும் நோய் தொடர்ந்து குறைவதை உறுதி செய்வதற்கான விரிவான யுக்தியை தொடர்ந்து அமலில் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்