பாகிஸ்தானில் ஊரடங்கைத் தளர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை - இம்ரான்கான்

பாகிஸ்தானில் ஊரடங்கைத் தளர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-09 09:59 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா தொற்று பரவல் வேகம் காட்டி வருகிறது.  பாகிஸ்தானில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கைத் தளர்த்தியது ஆபத்தானது என்று பல்வேறு தரப்பினர் எச்சரித்து வருகின்றனர். இந் நிலையில் இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஊரடங்கு கொரோனா பரவலுக்கு தீர்வாகாது என்பதை உலக நாடுகள் அறியத் தொடங்கியுள்ளன. வைரஸ் பரவிக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். கொரோனா வைரஸ் உச்சத்திற்கு வந்த பிறகுதான் குறையும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் கொரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதற்கான முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறு மக்களைக் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு மிகவும் கடினமான காலம் எனலாம். பாகிஸ்தான் ஒரு ஏழை நாடு. ஊரடங்கைத் தளர்த்துவதைக் காட்டிலும் வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில் இதுவரை கொரோனா வைரஸால் 1,08,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,172 பேர் பலியாகி உள்ளனர். 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்