இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது

இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது.

Update: 2020-06-15 22:00 GMT
ஜெருசலேம், 

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது அங்கு பல்வேறு நகரங்களில் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று புதிதாக 83 பேருக்கு வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது.சுமார் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் இதுவரை 19 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 300 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்