சீனாவில் இருந்து தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற டிக் டாக் பரிசீலிப்பதாக தகவல்

சீனாவில் இருந்து தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற டிக் டாக் நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Update: 2020-07-19 13:29 GMT
பெய்ஜிங்,

லடாக் எல்லையில் இந்திய பகுதிக்கு உரிமை கொண்டாடி சீனா, நமது நாட்டு ராணுவ வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலையடுத்து சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. அதன் ஒருபடியாக,   டிக்டாக் உட்பட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

பயனாளர்களின் தரவுகளை சீன அரசிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற சந்தேகம் டிக்டாக் எழுந்தது. ஆனால், டிக் டாக் நிறுவனம் இதை திட்டவட்டமாக மறுத்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது டிக்டாக் தனது தலைமையகத்தை சீனாவிலிருந்து லன்டனுக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும்,  இது தொடர்பாக இங்கிலாந்து அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இருப்பினும், அமெரிக்காவும் டிக்டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்க பரிசீலித்து வருகிறது. இதையடுத்து, டிக்டாக் நிறுவனம் தலைமையகத்தை மாற்ற திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்