ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான் அதிரடி
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல் தற்போது பகையாக மாறியுள்ளது.;
டெஹ்ரான்,
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் காசிம் சுலைமானி கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் 30 பேர் மீது ஈரான் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதனிடையே காசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்ததாக மவ்சாவி மஜித் என்பவரை கடந்த மாத இறுதியில் ஈரான் போலீசார் கைது செய்தனர்.
ஈரானின் ராணுவ ரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகளுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஈரான் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் மவ்சாவி மஜித்துக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை ஈரானின் நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது. காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல் முறையாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.