இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதின்
உலகம் முழுவதும் நாளை மறுதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.;
மாஸ்கோ,
உலகம் முழுவதும் நாளை மறுதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, சீனா, உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷியாவில் புத்தாண்டுடன் ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.