தொடர்ந்து 2-வது நாளாக பிரேசிலில் கொரோனா பரவல் குறைந்தது

பிரேசிலில் கொரோனா பரவல் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்தது.

Update: 2020-08-01 19:46 GMT
பிரேசிலியா,

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் 2-வது மோசமான நாடாக பிரேசில் நீடிக்கிறது. இருப்பினும் அங்கு தொற்று பரவல் சற்றே குறைந்து வருகிறது.

கடந்த புதன்கிழமை தொற்று பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 74 ஆக இருந்தது. ஆனால், வியாழக்கிழமை இது 57 ஆயிரத்து 837 ஆக குறைந்தது.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து 52 ஆயிரத்து 383 ஆனது. இது தொடர்ந்து அங்கு தொற்று குறைந்து வருவதை காட்டுகிறது. இருப்பினும் அங்கு தொற்று பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 66 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று 1,212 பேர் தொற்றுக்கு பலியாகினர். இதுவரை அங்கு தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 568 ஆக உயர்ந்தள்ளது.

மேலும் செய்திகள்