தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-08-09 23:35 GMT


* தென்கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள சில மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் மாயமாகி உள்ளனர்.

* தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசின் தலைநகர் டெகுசிகல்பாவில் கிணற்றை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு கசிந்து 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரிகள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 போலீசார் படுகாயமடைந்தனர்.

* நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான காட்சீனாவில் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில் ஆயுதமேந்திய கடத்தல் கும்பலைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்