பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 47,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 47,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-19 09:06 GMT
பிரேசிலியா,

உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் அரசாங்கம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும், ஆரம்ப காலத்தில் அங்கு நிலவிய அலட்சியப் போக்கு காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 47,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,07,354 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,352 பேர் பலியானதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 1,09,888 ஆக அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் இதுவரை 25,54,179 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 7,47,674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்