முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-01 18:29 GMT
வாஷிங்டன்,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிப்புக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 84.  கடந்த 9-ந் தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவற்றுக்கிடையே கொரோனா பாதிப்புக்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரணாப் முகர்ஜி நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்றது.

இதனையடுத்து பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைந்த செய்தி கேட்டு தான் மிகுந்த வேதை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்