பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-18 00:50 GMT
வாஷிங்டன்,

பிரதமர் மோடிக்கு நேற்று 69 வயது முடிந்து 70-வது வயது பிறந்தது. அவரது பிறந்த நாளை பாரதீய ஜனதா கட்சியினர் சேவை தினமாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடினார்கள். மோடியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். பல இடங்களில் மோடியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மோடியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள், மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதேபோல்,  பிரதமர் மோடிக்கு, உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டிரம்ப் கூறுகையில்,  70-வது பிறந்த நாளை  கொண்டாடும் சிறந்த தலைவரும் நல்ல நண்பருமான  இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்