உலகைச் சுற்றி....

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் கட்டுமான பணிகள் நடந்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

Update: 2020-10-06 22:58 GMT
* கொரோனா தொற்று காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் அனைத்தும் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என சீனா உள்ளிட்ட 26 நாடுகள் ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளன.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சதீஷ் காட்டன் சர்மிஸ்தா பராய் என்ற தம்பதி தங்கள் வீட்டின் வேலையாட்களை அடிமை போல நடத்தி துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சர்மிஸ்தா பராய்க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கலிபோர்னியா கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் கட்டுமான பணிகள் நடந்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

* அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் ராணுவத்துக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆர்மேனியா ராணுவத் தாக்குதலில் அஜர்பைஜானின் பொதுமக்கள் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும், படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆகவும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள சாரி புல் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று சுமார் 150 தலீபான் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர்.

மேலும் செய்திகள்