நிலாவை சொந்தமாக்கும் முயற்சி: 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் போட்டு உள்ளது.

Update: 2020-10-19 06:07 GMT
வாஷிங்டன்

சந்திரனை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் அமெரிக்காவின் நாசா ஈடுபடதொடங்கி உள்ளது. சந்திரனில உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் எடுக்கக்கூடிய உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களைத் நாசா தேடுகிறது

அது போல்  நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் போட்டு உள்ளது.

2028க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நாசா, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க, பல நிறுவனங்களுடன் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 714 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த வகையில், நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்புகொள்வதற்கும், எச்டி தரத்திலான படங்களை அனுப்பவும், நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க நோக்கியாவுக்கு இந்திய மதிப்பில் 102 கோடி ரூபாயை நாசா வழங்கியுள்ளது.  


மேலும் செய்திகள்