பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து: இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2020-10-28 05:24 GMT
பிரேசில்,

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நோயாளி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் அதிகமான நோயாளிகள் தீ விபத்துல் இருந்து மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மருத்துவமனை கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ கொளுந்துவிட்டு எரிந்து புகைமூட்டமாக காட்சியளித்தது. தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லாரோ போடோ கூறியதாவது:-

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகள் சக்கர நாற்காலிகளிலும் ஊன்றுகோல்கள் உதவியுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உயிரிழந்த 2 நோயாளிகள் 42 வயது மற்றும் 82 வயது மதிக்கத்தகவர்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகள்