துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமியும் ஏற்பட்டதாக தகவல்

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

Update: 2020-10-30 13:46 GMT
இஸ்தான்புல்,

 மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. ஏகியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கு பகுதிகள் குலுங்கின. பல கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.  

நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும்  தெளிவாக வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏகியன் கடல்பகுதியில் அமைந்துள்ள சமோஸ் தீவில்  சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டு கடல் அலைகள்  நகருக்குள் புகுந்ததாகவும் கிரீஸ்  அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்