உலகம் முழுவதும் கொரோனாவால் 5.1 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5.1 கோடியை தாண்டியுள்ளது.

Update: 2020-11-11 03:28 GMT
ஜெனீவா,

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,17,89,605 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் இந்த வைரஸ் காரணமாக இதுவரை 12,78,442 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,63,62,572 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,05,57,047 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 86,35,754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரேசில்(56,79,212) 3வது இடத்திலும், ரஷ்யா(18,17,109) 4வது இடத்திலும், பிரான்ஸ்(18,07,479) 5வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்