கொரோனா தொற்று; 6.2 கோடிக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையானது 6.2 கோடியை கடந்து உள்ளது.

Update: 2020-11-29 01:36 GMT
வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா பாதிப்புகளால் இதுவரை உலகம் முழுவதும் 14 லட்சத்து 49 ஆயிரத்து 709 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று அதிகாலை நிலவரப்படி வெளியிட்டு உள்ள செய்தியில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 127 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரத்து 55 நோயாளிகள் குணமடைந்து சென்றுள்ளனர்.  அவர்களில் 87 லட்சத்து 59 ஆயிரத்து 969 பேர் என்ற எண்ணிக்கையுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.  மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்பொழுது அமெரிக்காவில் மிக அதிக அளவாக 1 கோடியே 32 லட்சத்து 27 ஆயிரத்து 195 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அந்நாட்டில் அதிக அளவாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்