பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-01-23 10:54 GMT
போர்ட் மோர்ஸ்பை,

பப்புவா நியூ கினியா, நெருப்பு வளையம் எனப்படும் பூகம்பம் பாதிப்பு ஏற்பட கூடிய பகுதியில் அமைந்துள்ளது.  இதனால் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், பப்புவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் ஆனது, பின்ஸ்காபென் நகரில் இருந்து வடமேற்கே 36 கி.மீட்டர் தொலைவில் உணரப்பட்டு உள்ளது.  நிலநடுக்கம் 29.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  எனினும், இதனால் பொருளிழப்புகளோ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டது பற்றியே தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்