அமெரிக்காவில் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்தியர் நியமனம்

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் பல முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினரை நியமனம் செய்து வருகிறார்.

Update: 2021-01-26 06:17 GMT
குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களுக்கு தனது நிர்வாகத்தில் அவர் முக்கியத்துவம் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் அவர் பதவியேற்புக்கு முன்பாகவே 13 பெண்கள் உள்பட 20 இந்திய வம்சாவளியினரை முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஜெகதீசன் என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற ஜெகதீசன் கொலம்பஸ் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இதற்கு முன் அவர் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்துக்கான துணை பொது ஆலோசகராக இருந்துள்ளார்.

இதேபோல் அமெரிக்க எரிசக்தித் துறையில் முக்கியமான பொறுப்புகளுக்கு 4 இந்திய வம்சாவளியினரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

மேலும் செய்திகள்