முக்கிய உளவு தகவல்களை டிரம்புக்கு வழங்கக் கூடாது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந்தேதி பதவியேற்றார்.

Update: 2021-02-06 18:58 GMT
ஜோ பைடன்
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி புளோரிடாவில் உள்ள தனது சொகுசு பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அமெரிக்க அரசு நிர்வாகத்தில் மிகமுக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் உளவுத்துறை தகவல்களை டிரம்புக்கு வழங்கக்கூடாது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது ‘‘தாறுமாறாக நடந்துகொள்ளும் டிரம்ப் உளவுத்துறை விளக்கங்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கிறேன். டிரம்புக்கு தெரிவித்தால், உளவுத் தகவல்களை வெளியே கசியவிட்டு, அதுபற்றி ஏதாவது கமென்ட் அடிப்பதைத் தவிர, வேறு என்ன பலன் விளையப் போகிறது’’ எனக் கூறினார்.‌

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ‘‘நான் இப்போது கூறவில்லை ஒரு வருடத்துக்கும் மேலாக சொல்லி வருகிறேன். டிரம்ப் சேவை செய்ய தகுதியற்றவர். அவர் அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் திறமையற்ற ஜனாதிபதிகளில் ஒருவர்’’ என்றார்.

மேலும் செய்திகள்