அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,193- பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,193- பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-02-06 22:52 GMT
வாஷிங்டன், 

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  87,719 ஆகும். அதேபோல்,2,193-பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரொனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 
27,500,481- ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,72,991- ஆகும். 

மேலும் செய்திகள்