நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை - அமெரிக்காவில் அறிமுகம்

அமெரிக்காவில் நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-26 17:04 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நாய்களுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் 'பார்க்'(Bark) என்ற நிறுவனத்தின் சார்பில் புதிதாக 'பார்க் ஏர்லைன்ஸ்'(Bark Airlines) என்ற விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக நாய்களுக்கான சொகுசு விமான பயணத்தை வழங்குகிறது.


இந்த விமானத்தில் நாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், நாய்களுக்கு துணையாக அவற்றின் உரிமையாளர்களும் பயணம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாய்களுக்கென சவுகரியமான இருக்கை வசதி, படுக்கை வசதி மற்றும் டயப்பர்களும் வழங்கப்படுகின்றன.

தற்போது நியூயார்க்-லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்-லண்டன் ஆகிய நகரங்களிடையே விமான சேவை வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதிக நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் 'பார்க் ஏர்லைன்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் விலை உள்நாட்டு பயணத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.4.98 லட்சமாகவும், வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.6.64 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்