கொரோனா பாதுகாப்பு விதிமீறல் சுற்றுலா நிறுவனம் மூடல்;50 ஆயிரம் திர்ஹாம் அபராதம்

துபாய் நகரின் பாலைவனப் பகுதி ஒன்றில், சுற்றுலா நிறுவனம் ஒன்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நகர் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நிறுவனத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு சுற்றுலா நிறுவனம் முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்தது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை.

Update: 2021-02-17 01:07 GMT

துபாய்,

துபாய் நகரின் பாலைவனப் பகுதி ஒன்றில், சுற்றுலா நிறுவனம் ஒன்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நகர் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நிறுவனத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு சுற்றுலா நிறுவனம் முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்தது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை. குறிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய இந்த சுற்றுலா நிறுவனத்தை ஒரு மாத காலத்துக்கு மூட உத்தரவிடப்பட்டது. மேலும் 50 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுற்றுலா நிறுவனத்துக்கு 50 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை துபாய் சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்