வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 10 பேரின் மரண தண்டனை உறுதி டாக்கா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய திட்டம் தீட்டி பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-18 00:00 GMT

டாக்கா,

அவர்களில் ஒருவர் வேறு ஒரு கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 19 பேரில் 10 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சிறப்பு கோர்ட்டு கடந்த 2017 -ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து டாக்கா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.‌

கடந்த 4 ஆண்டுகளாக இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் நீதிபதி நேற்று இந்த வழக்கில் தனது இறுதி தீர்ப்பை வழங்கினார்.

அப்போது நீதிபதி பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 10 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். இவர்களை தூக்கிவிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்