மியான்மர் ராணுவத்தால் சுடப்பட்ட இளம்பெண் மரணம்;போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம்

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம்;ராணுவத்தால் சுடப்பட்ட இளம்பெண் மரணமடைந்தார்;

Update: 2021-02-19 13:28 GMT
நேபிடா

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தேர்தல் முறைகேடு தொடர்பாக மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த மியான்மர் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.

அதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பல வெவ்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ ஆட்சியை இடைவிடாமல் எதிர்த்து, தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க முயன்று வருகின்றனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சுமார் 495 பொதுமக்கள் ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 460 பேர் காவலில் உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் ராணுவத்துக்கு எதிராக நடத்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர. இந்தத் தாக்குதலில் 20 வயதான ஆங் சான் சூ தலையில் சுடப்பட்டு  பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆங் சான் சூ மரணம் அடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும். ஆங் சான் சூயின் மரணத்தை தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்