ரஷ்யாவில் மனிதர்களுக்கு புதிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு

ரஷ்யாவில் மனிதர்களுக்கு H5N8 என்ற வகை பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-20 16:27 GMT
மாஸ்கோ,

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், உலகம் முழுவதும் அந்நோயின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது.  

இந்த நிலையில், ரஷ்யா கோழிப் பண்ணையில் பணிபுரியும் சிலருக்கு H5N8 என்ற வகை பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடமும் ரஷ்யா தகவலை பகிர்ந்துள்ளது. 

பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பறவை காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் உடல்நிலையிலும் தற்போது வரை எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்