இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 13,492 பேருக்கு கொரோனா

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது.

Update: 2021-02-22 01:12 GMT
ரோம்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 09 ஆயிரத்து 746 ஆக உள்ளது.

ஒரே நாளில் 232 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 718 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.24 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 3.88 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.24 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 3.88 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்