கிரெடிட் கார்டு மூலம் 10 லட்சம் திர்ஹாம் கடன் வாங்கி செலுத்த முடியாமல் தவிப்பு இந்திய வாலிபருக்கு சிறப்பு சலுகை

இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் கடந்த 2008-ம் ஆண்டு துபாய்க்கு வந்தார். ஆரம்பத்தில் சிறிய அளவில் வேலையில் சேர்ந்த அவர் பின்னர் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் அளவுக்கு தனது பொருளாதார நிலையை மாற்றிக்கொண்டார்.

Update: 2021-02-24 11:21 GMT

துபாய்,

இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் கடந்த 2008-ம் ஆண்டு துபாய்க்கு வந்தார். ஆரம்பத்தில் சிறிய அளவில் வேலையில் சேர்ந்த அவர் பின்னர் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் அளவுக்கு தனது பொருளாதார நிலையை மாற்றிக்கொண்டார். தொடர்ந்து அதை பயன்படுத்தி வந்ததால் அவரது கடன் தொகையானது கிரெடிட் கார்டில் கட்ட வேண்டிய தொகை மற்றும் அபராதம் என மொத்தம் 10 லட்சம் திர்ஹாம் ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் இந்தியாவுக்கு சென்ற அவர் கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை முறையாக செலுத்த தவறினாா். இதனால் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், அந்த வாலிபர் மீண்டும் துபாய்க்கு வந்து தனது வேலையை வழக்கம்போல் செய்ய திட்டமிட்டார். ஆனால் அவர் மீதான புகார் நிலுவையில் இருந்ததால் கைது செய்யப்படும் சூழ்நிலை இருந்தது. இதனை தவிர்ப்பதற்காக அவர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துடன் பேசினார். அப்போது அவரின் நிலைமையை உணர்ந்த நிதி நிறுவனம், வாலிபர் கட்ட வேண்டிய தொகையை 25 ஆயிரம் திர்ஹாமாக குறைத்து உத்தரவிட்டது.

இந்த தொகையை விரைவில் செலுத்தி வாலிபர் மீண்டும் துபாய்க்கு திரும்புவார் என தெரிகிறது.

மேலும் செய்திகள்