ஜோ பைடன் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மஜூ வர்க்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-03-03 06:13 GMT
கோப்புப்படம்
வாஷிங்டன்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜூ வர்கீஸ். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டவர். தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு தொடர்பான ஏற்பாடுகளை கவனித்த தொடக்க குழுவின் 4 உறுப்பினர்களில் ஒருவராகவும் மஜூ வர்க்கீஸ் பணியாற்றினார்.

இந்த நிலையில் மஜூ வர்க்கீஸ், ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் வெள்ளை மாளிகையில் பணிபுரிவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இவர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்