ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம் -சவுதி அரசு

ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம் என சவுதி அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-03-04 03:45 GMT
Image courtesy : Reuters
ரியாத்

சவுதி பத்திரிகை  ஒகாஸின் தகவல்படி, தடுப்பூசி என்பது வர ஹஜ் புனித பயண அனுமதி பெறுவதற்கான "முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்".

சவுதி அரேபியாவின்  வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புனித ஹஜ் பயணம்  வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சவுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

சவுதி அரேபியாவின் இறுதி வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹஜ் பயணத்துக்கு இந்த ஆண்டு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளின் பட்டியலை இந்திய அரசும் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்