ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்கிறது: உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-03-05 02:37 GMT
Photo Credit: AFP
கோபன்ஹென்,

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குளூக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஐரோப்பிய நாடுகளில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் எண்ணிக்கை 6 வாரங்களாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த வாரம் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, சுமாா் 10 லட்சமாக இருந்தது.

இந்தப் பிராந்தியத்தைச் சோந்த பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, மீண்டும்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி திட்டங்களையும் விரைவு படுத்த வேண்டும்” என்றார். 53 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பாவில், 45 நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.

மேலும் செய்திகள்