பிரான்ஸ் கோடீஸ்வரர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

Update: 2021-03-08 02:14 GMT
பாரீஸ், 

பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ஆலிவர் டசால்ட் (69).  பிரான்ஸின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும் டசால்ட் விமான உற்பத்தி நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான ஆலிவர் டசால்ட் , ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

ஆலிவர் டசால்ட் பயணித்த ஹெலிகாப்டர் பிரான்சின் வடக்கே நார்மண்டி நகரில் கலாவ்டோஸ் என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது.  கடந்த இரு நாட்களுக்கு முன் பாரீஸ் நகரருகே பியூவாயிஸ் என்ற பகுதியில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரார்டு டார்மனின் ஆகியோருடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் டசால்ட்  கலந்து கொண்டிருந்தார். 

டசால்ட் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினார். அதில், நம்முடைய நாட்டிற்கு சேவையாற்றும் பணியை டசால்ட் ஒருபோதும் நிறுத்தியதே கிடையாது. அவரது திடீர் மரணம் பேரிழப்பு” என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்