புர்கா தடைக்கு ஆதரவாக வாக்களித்த சுவிட்சர்லாந்து மக்கள்

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் சட்டத்திற்கு பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.

Update: 2021-03-08 07:02 GMT
Photo Credit: AFP
பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் புர்கா  தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

சுமார் ஒரு ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வுக்கு 51.2 சதவீத மக்கள் ஆதர்வாக வாக்களித்துள்ளனர். இதனால், பொது இடங்களில் புர்கா அணிவதை சட்ட விரோதம் என வகை செய்யும் வகையிலான சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு இயற்றும் எனத்தெரிகிறது.

மேலும் செய்திகள்